News February 16, 2026
சென்னையில் சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி

தமிழக, ஆதி திராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம், டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து, ஆதி திராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் தாட்கோ tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Similar News
News February 18, 2026
சென்னை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

சென்னை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 18, 2026
சென்னை: மழைநீர் வடிகாலுக்கு ரூ.693 கோடி!

சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்க ரூ.10கோடி மதிப்பில் பசுமை சென்னை திட்டம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.693 கோடி ஓதுக்கீடு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, ரூ.323 கோடி, பன்முக ஒருகினைப்பு போக்குவரத்திற்கு ரூ.40 கோடி, அவசர கால கட்டுபாட்டு மைய திட்டத்திற்கு ரூ.5 கோடி, கல்வி வளர்ச்சிக்கு ரூ.11 கோடி, சுகாதார துறைக்கு ரூ.4.35 கோடி, சிறப்பு திட்டங்களுக்கு ரூ.157 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளன.
News February 18, 2026
சென்னை மாநகராட்சியின் 90 அறிவிப்புகள்!

சென்னை மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை மேயர் பிரியா இன்று(பிப்.18) வாசித்து நிறைவு செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடித்தது. இந்த உரையின் போது மாநகர துறைகள் வாரியாக மொத்தம் 90 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


