News May 11, 2024
மக்களை திரும்பி பார்க்க வைத்த கவின்

‘டாடா’ படத்தையடுத்து கவின் நடிப்பில் நேற்று வெளியான ‘ஸ்டார்’ பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ₹12 கோடி செலவில் தயாரான இப்படம் முதல் நாளில் மட்டுமே ₹1 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
வறுமையை வென்ற 25 கோடி மக்கள்: PM மோடி

GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என PM தெரிவித்துள்ளார். மா துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக PM குறிப்பிட்டார்.
News September 21, 2025
இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி: PM மோடி

நாளை (செப்.22), நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக PM மோடி தன் பேச்சில் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் இந்த விழாக்காலத்தில் இருந்து பயன்பெறத் தொடங்குவர் என்ற அவர், சுயசார்பு இந்தியாவை நோக்கிய மிகப்பெரிய அடியை எடுத்து வைப்பதாக கூறினார். மேலும், இந்த வரிச் சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றார்.
News September 21, 2025
BREAKING: நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் மிகப்பெரிய சேமிப்பு திருவிழா என மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டு மக்கள் 2.5 லட்சம் கோடியை சேமிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகள் ஜிஎஸ்டியால் நீக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.