News May 10, 2024
ஆஸ்துமாவுக்கு அருமருந்தாகும் பாகற்காய் ஜூஸ்

பாகற்காய் தோலை சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் போட்டு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகுதூள், தண்ணீர் சேர்த்து கலக்கினால் பாகற்காய் ஜூஸ் ரெடி. இது கல்லீரல் பிரச்னை வராமல் தடுக்கும். மேலும், நீரிழிவு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. உடல் வலிமையை கூட்டுவதற்கு உதவுகிறது.
Similar News
News September 22, 2025
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம்!

ஆபிஸ், பள்ளி, காலேஜுக்கு பஸ், ரயில் என மாறி மாறி செல்பவர்களின் பயணத்தை ஈசியாக்க, ‘சென்னை ஒன்’ APP-ஐ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். இனி ஒரே டிக்கெட்டில் சிட்டி பஸ், லோக்கல் ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். எந்த வழித்தடத்தில் எந்தெந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தப் போகிறோம் எனக் குறிப்பிட்டு QR CODE டிக்கெட்டை பெறலாம். விரைவில் பிற நகரங்களுக்கும் இந்த வசதி வருமா?
News September 22, 2025
மூலிகை: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா..

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➣பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் & கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் ➣ஃபோலேட் இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது ➣பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது ➣பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை வராமல் தடுக்கும். இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 22, 2025
மீண்டும் இணைந்த டிரம்ப்- எலான் மஸ்க்

அமெரிக்க வரி மசோதா விவகாரத்தில் டிரம்ப் – எலான் மஸ்க் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. டிரம்ப்பை எதிர்த்து புதிய கட்சி தொடங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். 3 மாதம் நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. கொல்லப்பட்ட வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கைகுலுக்கியபடி இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசினர். இந்த போட்டோவை X தளத்தில் பகிர்ந்த மஸ்க், FOR CHARLIE என பதிவிட்டுள்ளார்.