News February 15, 2026

மகா சிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை!

image

மகா சிவராத்திரி நாளை மாலை 5:04க்கு தொடங்கி, பிப்ரவரி 16 அன்று மாலை 5:34க்கு முடிவடைகிறது. இந்த நாள்களில் எப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? நாளை காலை & மாலை தவறாமல் மீண்டும் நீராட வேண்டும். *நாளை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கண்விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். *இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள் இரவு 11:30 – 1 மணி வரை கண்விழித்து வழிபாடு செய்தாலே பலன் கிடைக்கும்.

Similar News

News February 20, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வார்னிங்

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு TN அரசு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயம். இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று அடுத்த வாரத்திற்குள் (பிப்.25 கடைசி நாள்) முடிக்குமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. கைரேகை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டை முடக்கப்படலாம்.

News February 20, 2026

தேமுதிகவை காட்டி டிமாண்ட் கூட்டும் TTV

image

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் அதிமுக தலைமை ஷாக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல அமமுக புதிய டிமாண்டை வைத்துள்ளதாம். கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவுக்கு கொடுக்கலாம் என வைத்திருந்த தொகுதிகளை, அமமுகவுக்கு ஒதுக்கும்படி TTV கேட்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், EPS கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News February 20, 2026

FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

image

சமீபகாலமாக விண்ணைத்தொடும் அளவிற்கும் உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை, தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியிருக்கிறது. இன்று சவரனுக்கு ₹1,15,360-க்கு விற்பனையாகும் தங்கத்தின் விலை, வரும் மாதங்களில் ₹80,000-ஆக குறைய வாய்ப்புள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது. சர்வதேச அரசியல், முதலீட்டாளர்களின் விற்பனை போக்கு, டாலரை பயன்படுத்த ரஷ்யா எடுத்த முடிவு போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள் என சொல்லப்படுகிறது.

error: Content is protected !!