News May 10, 2024
மதுரை: கூலித் தொழிலாளியின் மகள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மதுரை உசிலம்பட்டி அருகே வசிக்கும் கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார். கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளார்.
Similar News
News September 18, 2025
மதுரை: 10th தகுதி.. ரூ.71,000 சம்பளத்தில் வேலை

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<
News September 18, 2025
மதுரையில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்

மதுரையில் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. அதில் கலெக்டர் பேசுகையில், ”1200க்கு மேல் வாக்காளர் உள்ள 300க்கும் மேலான ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளன. மேலும் தேவையானதாக திருமங்கலம் தொகுதியில் 6, திருப்பரங்குன்றத்தில் 3, மதுரை கிழக்கில் 3, உசிலம்பட்டியில் 4 உட்பட மொத்தம் 19 புதிதாகவே ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன”என்றார்.
News September 18, 2025
மதுரையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நாளை செப்.19 காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.