News February 14, 2026
காதலர் தினம்.. OYO-க்கு போறீங்களா..

காதலர் தினத்தையொட்டி ஹோட்டல் அறைக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு தள்ளுபடி விலையில் Oyo அறைகள் இருப்பதாக கூறி மோசடியாளர்கள் ஒரு விளம்பர யுக்தியை முன்னெடுத்துள்ளனர். அப்படி ஆன்லைனில் வரும் Link-குகளை க்ளிக் செய்தால், அடுத்த நிமிடமே பேங்கில் உள்ள உங்களது பணம் மொத்தமும் அபேஸ் ஆகிவிடும். எனவே, ‘Link-அ தொட்ட… நீ கெட்ட’ என போலீசார் எச்சரிக்கின்றனர். SHARE.
Similar News
News February 16, 2026
புதுச்சேரியிலும் தவெகவுக்கு ‘விசில்’

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விசில் சின்னத்தைக் கோரி தவெக விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுச் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, NDA-வில் தொடர்வதாக ரங்கசாமி அறிவித்துவிட்டதால் தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News February 16, 2026
FLASH: தங்கம், வெள்ளி.. விலை ₹35,000 குறைந்தது

தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. <<19155355>>தங்கம் விலை<<>> சவரனுக்கு ₹960 குறைந்துள்ளது. அதேபோல், ஒரு வாரமாக சரிவில் இருக்கும் வெள்ளி விலை மொத்தமாக ₹35,000 குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த வாரம் (பிப்.9) 1 கிலோ ₹3 லட்சத்திற்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ₹2.65 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. ₹4.25 லட்சம் வரை உயர்ந்த வெள்ளி விலை, தற்போது தொடர் சரிவில் உள்ளது.
News February 16, 2026
அறிவாலயத்தின் கொத்தடிமை ஊதுகுழல் நயினார்: TVK

<<19156118>>விஜய் கூட்டத்தில் இறப்பது நல்ல சகுனம்<<>> தானே என நயினார் பேசியதற்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், அறிவாலயத்தின் கொத்தடிமை ஊதுகுழலாக நயினார் மாறிவிட்டதாகவும், ஒருவரின் உயிரிழப்பை கேலி செய்வது அடிப்படை மனிதாபிமானம் அற்றது என்றும் கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து கொச்சையான கருத்துகளை பேசும் நயினார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


