News May 10, 2024
அரியலூரில் மழைக்கு வாய்ப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 6, 2025
அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…
News November 6, 2025
கடலுக்கு அடியில் அரியலூர்

மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்ததாகவும், பின் காலநிலை மாற்றங்களால், கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போதைய நிலம் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்ங்க…
News November 6, 2025
அரியலூர் மக்களே இத தெரிஞ்சுகோங்க

அரியலூர் மாவட்டம் பெரம்பலூரிருந்து பிரிக்கப்பட்டு தற்போது தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இது, அரியலூர், உடையார் பாளையம் என இரு கோட்டங்களை கொண்டது. மேலும் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் என 4 வட்டங்களும், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 201 ஊராட்சிகளை உள்ளது. இந்த தகவலை ஷேர் செய்யுங்க!


