News May 10, 2024

மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 16, 2025

மயிலாடுதுறை: உயிர் தப்பிய குழந்தைகள்

image

கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கனமழை காரணமாக அருகில் இருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மீது 100 ஆண்டுகள் பழமையான அரசமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அங்கன்வாடி மைய கட்டிடத்தில் உள்ளே இருந்த குழந்தைகள் எந்த பாதிப்பும் இன்றி உயிர்த்தபினர்.

News October 16, 2025

மயிலாடுதுறை: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

image

வருகிற 20-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டி கையை கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில் நேற்று சீர்காழி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கொள்ளிடம் முக்கூட்டு, மணிக்கூண்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் படையினர் சோதனை மேற்கொண்டனர்

News October 16, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!