News May 10, 2024
சொத்து தகராறு: தாயை தாக்கிய மகன் கைது

ஏரியூர், வெள்ளமன் காடு பகுதியை சேர்ந்த தம்பதி ராஜீ, வளர்மதி(55). இவர்களுக்கு 3 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்களது இரண்டாவது மகன் ரத்தினவேல், வளர்மதி யிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து, வீட்டில் இருந்த மரப் பொருட்களுக்கு தீ வைத்துள்ளார். அதனை தடுக்க முயன்ற தாய் வளர்மதியை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் பெரும்பாலை போலீசார் நேற்று ரத்தினவேலை கைது செய்தனர்.
Similar News
News August 30, 2025
1050 விநாயகா் சிலைகள் கரைப்பு…..

தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நீா்நிலைகளில் 1050 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. 3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு மேள தாளங்களுடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், ஒகேனக்கல், இருமத்தூா் தென்பெண்ணை ஆறு, சின்னாறு அணை, தொப்பையாறு ஆகிய நான்கு இடங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டன.
News August 30, 2025
தர்மபுரியில் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தர்மபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்தனர்.
News August 29, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.29) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக கரிகால் பாரிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர்!