News May 10, 2024
தஞ்சாவூரில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 30, 2025
தஞ்சாவூர் ஜில்லாவின் நினைவு சின்னங்கள் தெரியுமா?

நம்ம தஞ்சாவூர் என்று சொன்னாலே பெருமைக்கு பஞ்சம் இருக்காது. அப்படியாப்பட்ட தஞ்சாவூரில் வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்கள் இருப்பது பற்றி தெரியுமா?
✅தஞ்சை கோட்டை
✅தஞ்சை வீணை
✅தஞ்சை அகழி
✅தேர் நிறுத்தம்
✅தஞ்சை நால்வர்
✅கல்யாண சுந்தரம் பள்ளி
✅தாணிய களஞ்சியம்
✅சங்கீத மஹால்
✅சரஸ்வதி மஹால்
நம்ம தஞ்சைக்கு கிடைத்த இந்த பெருமைகளை நாம்தான் எடுத்து சொல்லனும்! மற்றவர்களும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
News August 30, 2025
தஞ்சாவூர்: பாலியல் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி மாதவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News August 30, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.