News May 10, 2024
தஞ்சாவூர்: 407 பள்ளிகளில் 129 பள்ளி 100% தேர்ச்சி!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 258 பள்ளிகளில் 95 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 149 பள்ளிகளில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளன.
Similar News
News October 14, 2025
தஞ்சை: பிணமாக கரை ஒதுங்கிய வாலிபர் உடல்!

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியரான பாரதி (24) என்பவரின் சடலம் நேற்று திங்கள்கிழமை மாலை மீட்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்றில் மூழ்கிய அவரை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் படித்துறையில் சடலம் ஒதுங்கிய நிலையில், போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 14, 2025
தஞ்சை: 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராஜப்பா பூங்கா அருகே காவல் உதவி மையத்தைத் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் இந்த மையம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் 800 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.
News October 14, 2025
தஞ்சை: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!