News May 10, 2024

தி.மலையில் இலவச தடகளப் பயிற்சி முகாம்

image

தி.மலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் இலவச கோடைகால தடகளப் பயிற்சி முகாம் வரும் மே 15 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மே 13 மற்றும் 14ம் தேதிகளில் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

தி.மலை சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…

image

தி.மலை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

தி.மலை: 10th பாஸ் போதும் ரயில்வே வேலை ரெடி

image

கொங்கன் ரயில்வேயில் உள்ள முக்கிய பதவியாக கீமேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் ஆக.11ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். செம்ம வாய்ப்பு, ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

தி.மலை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் (ஆகஸ்டு.04) திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

error: Content is protected !!