News May 10, 2024
காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தை (044-2723714, 044 – 27237124) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16961963>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
பெண்ணை கொலை செய்து நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் செட்டியார்பட்டில் உள்ள அட்டை நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை கொலை செய்து அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. ஹெப்சிபா என்ற பெண்ணை இரும்பு ராடல் அடித்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அட்டை நிறுவனத்தில் பணிபுரிந்த செந்தில்நாதன் என்பவரை பொன்னேரிக்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.