News May 10, 2024

திருச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 30, 2025

மலைக்க வைக்கும் திருச்சி மலைக்கோட்டை!

image

திருச்சி மலைக்கோட்டை என்பது மலைப் பாறையில் கட்டப்பட்ட ஓர் பழங்கால கோட்டை.யாகும். சுமார் 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோட்டை முதன்முதலாக பல்லவர்களால் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோழர்கள், தில்லி சுல்தான், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என பலரது கட்டுப்பாட்டின் கீழ் இக்கோட்டை இருந்து வந்தது. மேலும் இக்கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 100 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. SHARE NOW!

News August 30, 2025

துறையூரில் விபத்தில் பலியான இளைஞர்

image

திருச்சி மாவட்டம், துறையூரில் ஆத்தூர் சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலை தடுமாறி எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 30, 2025

திருச்சி: திட்ட முகாமில் குவிந்த மனுக்கள்

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் முசிறி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் 444 மனுக்கள் என மொத்தம் 1366 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!