News February 14, 2026
திருச்சி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மணப்பாறையை அடுத்த வெள்ளபூலாம்பட்டியில் உள்ள நியாயவிலைக்கடை வளாகத்தில் பிப்.14ஆம் தேதி, காலை 10.00 மணி முதல் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுவதில் இப்பகுதி மக்கள் கலந்து கொண்டு, தங்களின் ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை, மனுவாக அளித்து பயன்பெறலாம் என திருச்சி கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
திருச்சி: சோசலிஸ்ட் பார்ட்டி திமுகவிற்கு ஆதரவு

சோசலிஸ்ட் பார்ட்டி இந்தியா கட்சியின் தேசிய செயலாளர் தமிமுல் அன்சாரி, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் சோசலிஸ்ட் பார்ட்டி இந்தியா கட்சியின் ஆதரவை திமுகவிற்கு அளிப்பது என முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். மேலும், திமுக தலைமையிலான கூட்டணி அமோக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் கூறினார்.
News March 8, 2026
திருச்சி: கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் அறிந்துகொள்ளலாம். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை லால்குடியை சேர்ந்த மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
News March 7, 2026
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


