News May 10, 2024

மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது வழங்கியுள்ளன

image

பிரதமர் மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் மோடியை மதிப்பதாகவும், 5 அரேபிய முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்துள்ளதாகவும், இதுபோல் அந்நாடுகள் வேறு எந்த தலைவருக்கும் விருது அளித்ததில்லை என்றும் கூறினார்.

Similar News

News February 3, 2026

நாட்டு நிலவரம் தெரியாமல் பிதற்றும் விஜய்: சிவசங்கர்

image

விசில் சின்னத்திற்கு CM ஸ்டாலின் வாக்களிப்பார் என விஜய் கூறியதற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். மக்களை நேரடியாக சந்திக்கும் திமுக தலைவர்களுக்குத்தான் உண்மையான நிலவரம் தெரியும் என்ற அவர், தன் இருப்பிடத்திற்கு எல்லோரையும் வரவழைத்து பேசும் விஜய்க்கு நாட்டு நிலவரம் தெரியாது எனவும் சாடினார். மேலும், விஜய் பிதற்றுகிறார் என்றும் அவர் காட்டமாக விமர்சித்தார்.

News February 3, 2026

தங்கம் விலை மேலும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த வாரம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $47 (இந்திய மதிப்பில் ₹4,238) குறைந்து $4,800-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.

News February 3, 2026

மொழி திணிப்பை ஏற்கமாட்டேன்: ஐகோர்ட் நீதிபதி

image

மொழிப்போர் பற்றி மகனிடம் சொல்லிக்கொடுக்காமல் தன் கடமையில் இருந்து தவறியதாக சென்னை HC நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார். ‘பராசக்தி’ படம் பார்த்த தனது மகனிடம் மொழிப்போர் குறித்து கேட்டதாகவும், தெரியாது என பதில் வந்ததால் அவமானப்பட்டதாகவும் பேசியுள்ளார். மேலும் தமிழ் மொழி மீது உள்ள செருக்கின் காரணமாக, மற்றவர்கள் ஒரு மொழியை தன் மீது திணித்தால் அதை என்றுமே ஏற்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!