News February 13, 2026

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து!

image

காவேரிப்பட்டினம் அடுத்த பாலேகுளி கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவர் நேற்று (பிப்-12) வேலம்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே பைக்குள் வந்த மணிவண்ணன் மீது மோதியுள்ளார். இதில் அருள்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மணிவண்ணன் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 17, 2026

கிருஷ்ணகிரி: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

News February 17, 2026

கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 17, 2026

அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கடந்த 13 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 14வது நாளாக நேற்று (பிப்.16) தேர்தல் வாக்குறுதி எண்: 313-ஐ நிறைவேற்ற கோரி 313 வடிவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் நோஹிரா தலைமை தாங்கினார்.

error: Content is protected !!