News May 10, 2024
தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை காவலன் நான்: மோடி

நாட்டில் மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் வரை, மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது என பிரதமர் சூளுரைத்துள்ளார். மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் பிரசாரம் செய்த அவர், தான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலன் என்றார். வளர்ச்சியில் தன்னுடன் போட்டியிட முடியாது என்பதை அறிந்த காங்கிரஸ், பொய்களின் தொழிற்சாலைகளைத் திறந்து தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
Similar News
News September 23, 2025
இரவா? பகலா?

நார்வே நாட்டில் உள்ள சோமரோய் என்னும் சிறிய தீவில் ஒவ்வொரு கோடை காலங்களில் 69 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை (Midnight Sun). குளிர் காலத்தில் சூரியன் உதிப்பதில்லை (Polar Night). இந்த ஊரில் கடிகாரம் இல்லை. இங்கு வாழும் மக்களுக்கு நேரம் ஒரு பொருட்டல்ல. உங்களுக்கு இந்த தீவில் வாழ ஆசையா இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
ரசிகர்களின் காத்திருப்பை அதிகரித்த சூர்யா

நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், ‘கருப்பு’ படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், இந்த ஆண்டு வர வாய்ப்பில்லை. அடுத்தாண்டு பொங்கலுக்கு ஏற்கெனவே ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் சூர்யாவின் கருப்பு படம் 2026 ஏப்ரலில்தான் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News September 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 467
▶குறள்: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
▶பொருள்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.