News May 10, 2024

செங்குணம் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி 

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 14, 2025

பெரம்பலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

image

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <>அதிகாரபூர்வ இணையதளத்தில்<<>> புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 14, 2025

பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

image

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளிடம் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் 13.10.2025 விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு, உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

News October 14, 2025

பெரம்பலூர்: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், இன்று (அக்.14) மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மின்வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் மேகலா தலைமை தாங்குகிறார். மின் கட்டணம், மின் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள், புதிய இணைப்புகள் மற்றும் மின்வாரியம் தொடர்பான பிற குறைபாடுகளை பொதுமக்கள் கூட்டத்தில் நேரடியாகத் தெரிவித்து தீர்வு பெறலாம்.

error: Content is protected !!