News May 10, 2024
மாநில அளவில் சாதனை படைத்த குமரி மாணவி!

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. குமரி மாவட்டத்தில் 96.24 மாணவர்கள் தேர்ச்சி பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளது. குலசேகரம் எஸ்.ஆர்.கே.வி மேல்நிலை பள்ளியில் பயின்ற காவல்ஸ்தலம் பகுதியை சேர்ந்த மாணவி தீபிகா 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் மாநில அளவில் 2-வது இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
Similar News
News August 21, 2025
குமரி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை <
News August 21, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 21) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.64 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.10 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.56 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.66 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 623 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 21, 2025
குமரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்!

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (22.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் குமரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற SHARE பண்ணுங்க.