News February 13, 2026
நுரையீரல் நோய் காரணமாக தற்கொலை

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (65). இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 20, 2026
கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 20, 2026
ஹைதராபாத்–கொல்லம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோவை போத்தனூர் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்–கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் (07193) சனிக்கிழமை இரவு 11:10-க்கு ஹைதராபாத்தில் புறப்பட்டு, திங்கள் காலை கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக (07194) திங்கள் இரவு 10:45-க்கு கொல்லத்தில் புறப்பட்டு செவ்வாய் மாலை ஹைதராபாத் வந்தடையும். இந்த நீட்டிப்பு பயணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்
News February 20, 2026
JUST IN: கோவையில் இளைஞர் தலை நசுங்கி பலி!

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கோவை புலியகுளம் பகுதியில் மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்காக தோண்டப்பட்ட மணல் அப்படியே சாலையில் கிடந்துள்ளது.இந்நிலையில் இளைஞர் ஒருவர் டூவீலரில் அவ்வழியே சென்ற போது மண் சறுக்கி கீழே விழுந்தார்.அப்போது, பின்னால் வந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி பேருந்து தலையில் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி பலியானார்.


