News May 10, 2024
BREAKING: கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் தேர்தலை காரணம் காட்டி ஜாமின் கோரி இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Similar News
News October 23, 2025
2045-ல் விண்வெளியில் வசிப்போம்: ஜெப் பெசோஸ்

இன்னும் 20 வருஷம் தான். நாம் எல்லாரும் விண்வெளியில் வீடு கட்டிவிடுவோம் என்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். 2045-க்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என்று கணிக்கும் பெசோஸ், நிலவு மற்றும் பிற கோள்களில் ரோபோக்கள் வேலை செய்வார்கள் என்றும் கூறுகிறார். AI வேலைகளை பறிக்காது என்றும், அது சமூகத்திற்கு அதிக செழிப்பையே கொடுக்கும் எனவும் ஜெப் பெசோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
BREAKING: இந்திய அணி 264 ரன்கள் குவிப்பு!

ஆஸி.,க்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264/9 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ரோஹித் 73 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 61 ரன்களும், அக்சர் படேல் 44 ரன்களும் அடித்து அவுட்டாகினர். ஆஸி., அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களையும், பார்ட்லெட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த ஸ்கோரை Defend செய்து வெற்றி பெறுமா இந்தியா?
News October 23, 2025
BREAKING: இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ்(68) உடல்நலக்குறைவால் காலமானார். தேவாவின் சகோதரர்கள் சபேஷ் – முரளி இருவரும் இணைந்து தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். சபேஷ் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP