News February 13, 2026
நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.
Similar News
News March 11, 2026
திருநெல்வேலி: அரசின் கோர முகத்தை வெளிப்படுத்தியது – MLA

நெல்லை எம் எல் ஏ நைனார் நாகேந்திரன் செய்தி குறிப்பில், மதிய உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத போலி சமூகநீதி மாடல் அரசு இது. கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 44 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலி சமூக நீதி மாடல் அரசின் கோர முகத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
திருநெல்வேலி: சரமாரியான கத்திக்குத்து – பெண் வாக்குமூலம்

கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன் தினம் மாயாண்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது தாயை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அவரது தாய் நிலை குலைந்த நிலையில் தற்காப்புகாக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாயாண்டியின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி இறந்தார்.
News March 11, 2026
நாங்குநேரி தொகுதியில் போலீசார் அணிவகுப்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து, மஞ்சங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுச் தேர்தல் பாதுகாப்பு மற்றும் அமைதியாக தேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


