News May 10, 2024
நாமக்கல்: 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் அருகே முத்துடையார்பாளையத்தை சேர்ந்த மாணவி ஹரிணி புதன்சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவி ஹரிணி 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக இடம் பிடித்துள்ளார். மாணவி ஹரிணிக்கு ஊர் மக்களும் பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
Similar News
News July 8, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் திட்டம்

நாமக்கல்: தமிழ்நாட்டின் வேலையில்லா இளிஅஞர்களுக்கு திறன் பயிற்சி, ஊக்கத் தொகையுடன் ‘வெற்றி நிச்சயம்’ எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதில், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் பயன்பெறலாம். தொலைதூரத்தில் இருந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம். அருகில் உள்ள மாவட்ட இ சேவை மையத்தையும் அணுகலாம். இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக். உடனே SHARE செய்யவும்
News July 8, 2025
நாமக்கல்லில் நாளை மின் ரத்து அறிவிப்பு

நாமக்கல் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக நாளை(ஜூலை 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபடி, நாமக்கல், நெல்லியாராயண், அய்யம்பாளையம், வெற்றிப்பட்டி, வையந்ததம், NGGO காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் ரத்து ஏற்படும். இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!
News July 8, 2025
நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.