News February 12, 2026

பொறுத்து கொள்ளமாட்டேன்.. நடிகை ஆவேசம்!

image

சமீபத்தில் நடிகர் ராம்சரண் – உபாசனா தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், மகள் பிறந்தபோது இல்லாத கொண்டாட்டம், மகன் பிறந்த பிறகு பிரமாண்டமாக உள்ளதாக SM-ல் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொன்னால், பொறுத்து கொள்ளமாட்டேன் என நடிகை லாவண்யா திரிபாதி ஆவேசமாக பேசியுள்ளார். சிரஞ்சீவியின் தம்பி குடும்பத்தின் மருமகள் லாவண்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 19, 2026

தொகுதியை மாற்றுகிறாரா உதயநிதி?

image

வரும் தேர்தலில் திருவாரூரில் போட்டியிட உதயநிதி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சென்னை தொகுதிகளில் திமுகவுக்கு பின்னடைவு என கணிப்புகள் வருவதே காரணம் என்கின்றனர். திமுகவின் கோட்டையான திருவாரூரில் தான் 2011, 2016-ல் கருணாநிதி கூட வென்றிருந்தார். எனவே, அங்கு சிட்டிங் MLA-ஆன பூண்டி கலைவாணன் தான் இம்முறையும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களம் இப்படி மாறியிருப்பதாக பேசப்படுகிறது.

News February 19, 2026

மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணப்பம்.. அரசின் தகவல்

image

மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்த பிறகு பலரும் புதிதாக விண்ணப்பிக்க இ-சேவை, தாசில்தார் ஆபிஸ், கலெக்டர் ஆபிஸ்களில் குவிகின்றனர். தற்போது புதிதாக விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை; ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மேல்முறையீடு மனுக்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுவதாக அதிகாரிகள் பதில் கூறி திருப்பி அனுப்புகின்றனர். அதனால், பெண்கள் தேவையின்றி அலைச்சலில் ஈடுபட வேண்டாம். SHARE IT.

News February 19, 2026

நீங்கள் எடுத்த சுகர் டெஸ்ட் எல்லாம் தப்பு.. ஷாக் ரிப்போர்ட்

image

சுகருக்கு எடுக்கப்படும் HbA1c டெஸ்ட் சரியான ரிசல்ட்டுகளை வழங்குவதில்லை என லான்செட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை ரத்த சிவப்பணுக்களில் (RBC) உள்ள சர்க்கரையின் அளவை கண்டறிகிறது. ஆனால் இந்தியாவில் நிறைய பேருக்கு ரத்த சோகை மற்றும் பிற ரத்த பிரச்சனைகள் இருப்பதால் ரத்த செல்களை பாதிப்படைகிறது. இதனால் HbA1c துல்லியமான முடிவுகளை வழங்காமல் போகலாம் என கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு சுகர் இருக்கா?

error: Content is protected !!