News February 12, 2026

தேர்தல் புறக்கணிப்பு.. CM ரங்கசாமி அறிவித்தார்

image

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக வருகிற சட்டப்பேரவைத் தேர்தலையும் புறக்கணிக்க தயார் என்று CM ரங்கசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, இம்முடிவை ரங்கசாமி உறுதியாக எடுத்தால் அதனை ஆதரிப்பதாக திமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல் வெளியாகிய நிலையில், இவ்வாறு CM அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 20, 2026

மக்கள் எண்ணத்துக்கு எதிராக தேமுதிக கூட்டணி: GK வாசன்

image

கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது என GK வாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்துள்ளது TN மக்களின் எண்ணத்துக்கு எதிரானது; விஜயகாந்த் இருந்தவரை அக்கட்சி திமுகவுடன் கூட்டணி சேரவில்லை எனவும், இது மக்கள் மனநிலைக்கு ஏற்ற கூட்டணி இல்லை என்றும் பேசியுள்ளார். NDA கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News February 20, 2026

தன வரவு அதிகரிக்கும் மகாலட்சுமி வழிபாடு!

image

வெற்றிலையை பன்னீரில் சுத்தம் செய்து, அதன் நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் இடவும். அதன் நடுவில் குங்குமப் பொட்டு வைக்கவும். தாம்பாள தட்டின் மேல் இந்த வெற்றிலையை,
மகாலட்சுமியாக பாவித்து மலர்களாலோ, அட்சதையாலோ, நாணயங்களாலோ அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனையின் போது, பின்வரும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள். ‘ஓம் தன தான்யாதிபதயே நமஹ’. இந்த ஆன்மிக பதிவை அனைவரும் அறிய ஷேர் பண்ணுங்க.

News February 20, 2026

தங்கம் விலை ஒரேநாளில் தலைகீழாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2-வது நாளாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸுக்கு(28g) $5 அதிகரித்து $4,993 ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் $1 அதிகரித்து $78-ஆக உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. தங்கம் விலை நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ₹2,160 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!