News February 12, 2026

ஆதாருக்கு முன் இதான் இந்தியர்களின் அடையாளம்!

image

உங்க தாத்தா, பாட்டி கையில் பாருங்க, இந்த தழும்பு இருக்கும். ஆதார் கார்டுக்கு முன், இந்தியர் என்பதற்கு அடையாளம் என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இந்தியர்களின் கையிலும் இத்தழும்பு இருந்தது. பெரியம்மையை தடுக்க போடப்பட்ட தடுப்பூசியால் உண்டாகும் தழும்பு இது. 1980-களின் பிற்பகுதி வரை போடப்பட்ட இந்த தடுப்பூசி, சொட்டு மருந்து வருகைக்கு பிறகு நிறுத்தப்பட்டது. உங்க வீட்டில் யாருக்காவது இந்த தழும்பு இருக்கா?

Similar News

News February 21, 2026

அஜித் பவார் மரணம்.. மோடிக்கு பரபரப்பு கடிதம்

image

அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர் ரோஹித் பவார் ஏற்கெனவே குற்றஞ்சாட்டி இருந்தார். தற்போது, PM மோடிக்கு அவர் பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய <<19181375>>VSR நிறுவனத்துக்கும், மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் <<>>தெலுங்கு தேசம் கட்சிக்கும் தொடர்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ராம் மோகன் பதவி விலக உத்தரவிடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News February 21, 2026

போதைப்பொருள்கள் விற்பதே திமுகவினர்தான்: EPS

image

தன்னை துரோகி என சொல்லும் CM ஸ்டாலின் தான் மக்களுக்கு துரோகம் செய்தவர் என்று EPS விமர்சித்துள்ளார். 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா கிடைக்கிறது; திமுகவினரே போதைப்பொருள்களை விற்பதால் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

News February 21, 2026

சிசேரியன் vs சுகப் பிரசவம்: எது சிறந்தது?

image

கர்ப்பிணிகள் பலருக்கும் எது சரியான பிரசவ முறை என்ற குழப்பம் இருப்பது இயல்பே. இந்நிலையில் சுகப் பிரசவம் இயற்கையானது என்றாலும், சிசேரியனை தோல்வியாக கருதவேண்டிய அவசியமில்லை என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பிரசவ முறை என்பது ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் வேறுபடக் கூடியது, தனித்துவமானது என்றும், தாயின் உடல்நலம், குழந்தையின் நிலை போன்றவற்றில் பாதிப்பு எனும்போது சி-பிரிவை தவிர்க்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

error: Content is protected !!