News May 10, 2024
மாநில அளவில் 3 இடங்களை பிடித்து சாதனை

நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளியை சேர்ந்த சஞ்சனா அணுஸ் என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், பாக்கியலட்சுமி, சுப காயத்ரி ஆகிய இருவர் 498 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தினையும் ரஷிகா என்ற மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்தவர்களை பள்ளி தாளாளர் திவாகரன் பாராட்டினார்.
Similar News
News September 16, 2025
5 மாவட்டங்களுக்கு பனை விதைகள் அனுப்பி வைப்பு

திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று (செப்.16) நடைபெற்றது. நெல்லை பயிற்சி ஆட்சியர் நவலேந்து ஐஏஎஸ் கலந்து கொண்டு பனை விதைகள் நிரப்பப்பட்ட மூன்று வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News September 16, 2025
நெல்லை வழியாக சென்னைக்கு ஏசி ரயில் அறிவிப்பு

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி வழியாக சென்னை சென்ட்ரல் செங்கோட்டை இடையே ஏசி பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்குகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் (06121/06122) இயக்கப்பட உள்ளன. அனைத்து பெட்டிகளும் ஏசி பெட்டியாக இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 16, 2025
கவின் கொலை வழக்கு; எஸ்ஐ ஜாமின் மனு இன்று விசாரணை

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் கவின் கடந்த ஜூலை மாதம் கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஜாமின் மனு கோரி உதவி ஆய்வாளர் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று மற்றும் இன்று அந்த மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.