News February 11, 2026
பெரம்பலூர் SP அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூர் SP அனிதா உத்தரவின்படி, ஏடிஎஸ்பி கோபாலசந்திரன் தலைமையில் இன்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட 31 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பெற ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் இம்முகாமிற்கு, காவல்துறை சார்பில் பாலக்கரையிலிருந்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
பெரம்பலூர் ஆட்சியர் அறிவுரை!

பெரம்பலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சலைத் தடுக்க, இறைச்சி கூடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்த நோய் பறவைகளிடமிருந்து நேரடியாகவும், தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என கேட்டுக் கொள்ளார்.
News February 13, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம், பாண்டகபாடி, பெண்ணக்கோணம் (தெற்கு), கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் வரும் சனிக்கிழமை (14.2.2026) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.