News May 10, 2024

பெரம்பலூர் 9ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.73% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.62 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.44 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 9ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 28, 2025

‎பெரம்பலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

‎பெரம்பலூர் மாவட்டத்தில் (28-09-2025) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எளம்பலூர் தந்தை ரோவர் உயர்நிலைப் பள்ளி, ஆதனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 15 துறைகள், 46க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 28, 2025

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

image

கூட்டுறவு துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’39’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.96,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.29) கடைசி நாளாகும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 28, 2025

பெரம்பலூர்: இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற 8ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தவராக இருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்களுடன் தனியார் அழகு நிலையங்களில் பணிப்புரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!