News February 11, 2026
கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9- 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹௌசிங் போர்டு பேஸ் 1 மற்றும் 2, கலெக்டரேட், ஓல்ட்பேட், கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
Similar News
News February 16, 2026
ஓசூரில் துணிகர சம்பவம்!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த உதயகுமார் (22) ஓசூரில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நபர் உதயகுமாரை மிரட்டி ரூ.300 மற்றும் செல்போனை வழிப்பறி செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்த உஸ்மர் (24) என்பது தெரியவந்தது.
News February 16, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்றைய (பிப்.16) நீர்மட்டம் 49.3 முதல் 49.55 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
News February 16, 2026
கிருஷ்ணகிரியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

தொட்டிநாயக்கனஅள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் முனிராஜ் (13). இந்த சிறுவன் கடந்த 3 மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் பிப்ரவரி 14 வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரனனி நடத்தி வருகின்றனர்.


