News May 10, 2024

திருச்சி மாவட்டம் 5வது இடம் 

image

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 16,737 மாணவர்கள் மற்றும் 17,032 மாணவிகள் என மொத்தம் 33,173 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 31,594 பேர் தேர்ச்சி பெற்றனர். தற்பொழுது, திருச்சி மாவட்டம் மாநிலத்தில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

Similar News

News February 2, 2026

திருச்சியில் குவிந்த 663 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 663 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News February 2, 2026

திருச்சி: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

image

எடமலைப்பட்டி புதூர் ஜே.ஜே நகர் பகுதியைச்சேர்ந்த கோபால் என்பவர் குடும்ப பிரச்சனையில், தனது மனைவியை தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கோபால் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி விஷ்ணு பிரியா உத்தரவிட்டார்.

News February 2, 2026

திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!