News February 10, 2026
TTV போன்று தொண்டர்களும் மாறிவிடுவார்களா? மமக

EPS ஒரு தீயசக்தி என்று சொல்லி கட்சி ஆரம்பித்த TTV தற்போது அதிமுகவுடன் கைகோர்த்ததை அமமுக தொண்டர்கள் ஏற்கமாட்டர்கள் என மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. முக்குலத்தோர் சமூகத்துக்கு EPS எதிரானவர் என TTV கட்டமைத்த பிம்பத்தால் ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக சரிவை சந்தித்தது. இன்று அவர் சேர்ந்துவிட்டார் என்பதற்காக தொண்டர்களும் உடனே மனம் மாறிவிடுவார்களா என கேள்வியெழுப்பியுள்ளது.
Similar News
News February 18, 2026
திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 18, 2026
அரசியல் தலைவர்களுக்கு SC அறிவுரை!

நாட்டில் வெறுப்பு பேச்சு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என SC அறிவுறுத்தியுள்ளது. வெறுப்பு பேச்சுகளை தடுக்க ஏற்கெனவே வழிகாட்டுதல்களை (SOP) வெளியிட்டுள்ளோம்; ஆனால் பொதுமேடைகளில் கட்டுப்பாட்டை மீறினால் SOP-க்கு பயனில்லை என்றும், வெறுப்புப் பேச்சை எதிர்த்துப் போராடுவதற்கு சட்டங்களை விட மக்களின் மனநிலையில் ஆழமான மாற்றம் தேவை என்றும் தெரிவித்துள்ளது.
News February 18, 2026
காதலியை கொலை செய்து சடலத்துடன் உறவு.. SHOCKING

காதலர் தினத்தன்று காதலியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் உறவு கொண்ட கொடூர இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தூரில் 24 வயது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பான போலீஸ் விசாரணையில் பெண்ணின் காதலன், பியூஷ் தம்னோடியா, ஆவியுடன் உரையாட விரும்பியதால் இதை செய்ததாக நூதன வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


