News February 10, 2026
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

கோவை ஆட்சியர் அலுவலகம் முன், உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ₹6,000 முதல் ₹15,000 வரை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர்கள், தமிழக அரசு தங்களை புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தனர். மகளிர் உரிமைத் தொகை கேட்காமலே வழங்கப்படும் நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்காததை கண்டித்து முழக்கமிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.
Similar News
News February 15, 2026
BREAKING: கோவை வந்தார் ராஜ்நாத் சிங்!

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வருகை தந்துள்ளார். இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவ்விழாவில் பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
News February 15, 2026
கோவை: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 15, 2026
கோவை வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. அங்குள்ள ஆதியோகி சிலை முன் நடைபெறும் இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7,000 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


