News May 10, 2024
10th RESULT: மயிலாடுதுறையில் 90.48% தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 90.48% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.61% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.30% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Similar News
News December 29, 2025
மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News December 29, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு ஊசி திட்டத்தின் கீழ் 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று(டிச.29) முதல் தொடங்கி ஜனவரி 28ஆம் தேதி வரை கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி போட்டு கொடிய வைரஸ் கிருமிகளில் இருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
மயிலாடுதுறை: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!\


