News May 10, 2024
10th RESULT: தென்காசியில் 92.69% தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் 92.69 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.93% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.46% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Similar News
News January 21, 2026
தென்காசியில் கடைகளில் திடீர் சோதனை

தென்காசி நகராட்சி 29 வது வார்டு சுவாமி சன்னதி பஜார், மற்றும் 30வது வார்டு கீழ ரத வீதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் உத்தரவு படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கடைகளில் நடத்திய சோதனையில் நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
News January 20, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (20-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.
News January 20, 2026
தென்காசி: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 24.11.2025 ஆம் தேதி தொடர் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் விதமாக வரும் 24ம் தேதி சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாட்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.


