News May 10, 2024
10th Result: அரியலூர் மாவட்டம் முதலிடம்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையிலும் 96.20% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 23, 2025
12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மழையில் நனைவதை தவிர்க்க, வெளியே செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள்.
News September 23, 2025
இந்தியாவில் முதன் முதலாக சாதித்த பெண்கள்

இந்தியாவில் தத்தம் துறைகளில் முதன் முதலாக சாதித்த பெண்களின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம். பெண்களின் சக்தியையும் திறமையையும் வெளிப்படுத்தி இவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் பணி அரசியலுக்கும், பெண்கள் உரிமைகளுக்கும் முன்னோடியாக உள்ளது. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த முதல் பெண் யாரேனும் விடுபட்டு இருந்தால், கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 23, 2025
Introvert தெரியும், Extrovert தெரியும்.. Otrovert தெரியுமா?

பொதுவாக மக்களை Introvert, Extrovert என்று வகைப்படுத்துவார்கள். தற்போது புது வரவாக ‘Otrovert’ என்ற வகையினரை உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் மக்கள் அதிகமாக கூடும் பார்ட்டிகளுக்கு செல்ல விரும்பினாலும், அங்கு ஒருசிலரிடம் மட்டுமே சகஜமாக இருப்பார்களாம். ஆனால், பழகுபவர்களுடன் நல்ல பிணைப்பும், தன்னிச்சையாக சிந்திக்கும் தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்களாம். இந்த மூன்றில் நீங்க எந்த வகை?