News February 10, 2026
இனி ₹50,000 டிரான்சாக்ஸனுக்கு பான் தேவையில்லை..

இதுவரை ₹50,000-க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டியிருந்தது. இந்நிலையில், வரைவு வருமான வரி விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின்படி, ₹10 லட்சம் வரையிலான பரிமாற்றத்திற்கு பான் எண் தேவையில்லை. அதேபோல், ₹5 லட்சத்துக்கு மேல் பைக், கார் வாங்கினாலும், ஓட்டலில் ₹1 லட்சத்துக்கு மேல் பில் இருந்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டும். இந்த விதிகள் ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது.
Similar News
News February 16, 2026
OPS-க்கு ஆதரவாக செயல்படும் அதிமுக MLA?

அதிமுகவிலிருந்து பிரிந்த OPS 2017-ல் பெருந்துறைக்கு சென்றபோது, அதிமுக MLA ஜெயக்குமார் அவரது ரிசார்டில் அவரை தங்கவைத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் சிலர் அவரை OPS ஆதரவாளர் என குற்றம்சாட்டுவதால் இம்முறை அவருக்கு EPS சீட் வழங்க மறுக்கிறாராம். ஆனால், ஜெயக்குமார் தீவிர EPS விசுவாசி எனவும், 2017-ல் KC பழனிசாமியே ரிசார்ட் புக் செய்து OPS-ஐ அழைத்து வந்தார் எனவும் அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
News February 16, 2026
அனைத்து மகளிருக்கும் ₹2,000.. புதிய அப்டேட்

TN அரசு வழங்கிய கோடைக்கால சிறப்புத் தொகை ₹2,000-ஐ அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என CM CELL-க்கு பலரும் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில், பணம் கிடைக்காத சுமார் 90 லட்சம் குடும்பத் தலைவிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், விடுபட்டவர்களுக்கு ₹2,000 வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.
News February 16, 2026
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும்: தி.சீனிவாசன்

சிறுவர்களுக்கு ஓட்டு இருந்தால்தான் தவெகவுக்கு வாக்குகள் கிடைக்கும் என திண்டுக்கல் சீனிவாசன் கிண்டலடித்துள்ளார். பாஜக எல்லாம் ஒரு கட்சியா என செங்கோட்டையன் பேசியதை குறிப்பிட்ட அவர், நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தபோது பாஜக அவருக்கு எப்படி தெரிந்தது என கேட்டுள்ளார். மேலும், செங்கோட்டையன் பேசியது தவறு எனவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.


