News February 10, 2026

IND vs PAK மேட்ச் நடக்கும்.. U turn அடித்த பாகிஸ்தான்!

image

IND-க்கு எதிராக T20I WC-ல் PAK விளையாடும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேற்றை தினம், அடுக்கடுக்கான<<19089225>>கண்டிஷன்களை<<>> பாகிஸ்தான் வைத்திருந்த நிலையில், தற்போது அந்த அணி நிர்வாகம் மொத்தமாக U turn அடித்துள்ளது. வங்கதேசம், இலங்கை, UAE உள்ளிட்ட நட்பு நாடுகளுடைய கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக PAK PM ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 20, 2026

அமைச்சர் பதவியிலிருந்து நேருவை தூக்குங்க: விஜய்

image

அமைச்சர் பதவியில் இருந்து கே.என்.நேருவை நீக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். நகராட்சி துறையில் நடைபெற்றுள்ள ₹1,020 கோடி ஊழல் தொடர்பான ஆதாரங்களை ஐகோர்ட் உறுதிசெய்தும், நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு இது பெரும் அவமானம் என சாடியுள்ளார். மேலும், ஊழல் மலிந்த இந்த அரசை 2026 தேர்தலில் மக்கள் தூக்கியெறிய தயாராகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

உங்களுக்கு PM KISAN பணம் வருமா?.. செக் பண்ணுங்க!

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) அடுத்த வாரம் (அ) மார்ச் முதல் வாரத்தில் மத்திய அரசு விடுவிக்கும் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்பதை ஆன்லைனில் அறியலாம். pmkisan.gov.in இணையதளம் சென்று, Beneficiary List ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதன்பின், விவரங்களை உள்ளிட்டு Get Report பட்டனை கிளிக் செய்தால் பயனாளிகளின் பட்டியல் வெளியாகும். SHARE

News February 20, 2026

முட்டை விலை சரசரவென சரிந்தது

image

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாள்களாக முட்டை கொள்முதல் விலை ₹5.40 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை கொள்முதல் விலை ₹5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை சரிந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். உங்க ஊரில் முட்டை விலை என்ன?

error: Content is protected !!