News May 10, 2024
10th RESULT: திருவள்ளூரில் 86.52% தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 86.52% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.52% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.56% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Similar News
News August 27, 2025
விசிக மாவட்ட நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தனியார் துப்பாக்கித் தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாட பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. குமார் மணவாளநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது ஆட்சியரின் பரிந்துரைப்படி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
News August 27, 2025
திருவள்ளூர் மக்களே ட்ரோன் ஓட்ட ஆசையா?

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் செப்.9 முதல் 11 வரை ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ட்ரோன்களை இயக்குவது, விதிமுறைகள், அரசு தரும் மானியம், ட்ரோன்களை வைத்து தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் 9543773337 / 9360221280 எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 27, 2025
திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) 044-27662400 திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க*