News February 10, 2026
திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

தாட்கோ சார்பில் திருச்சியை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <
Similar News
News February 19, 2026
திருச்சி: ரயிலில் அடிபட்டு முதியவர் உடல்சிதறி பலி

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர், அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே இருப்புபாதை போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவரின் அங்க அடையாளங்களை வெளியிட்டு, அவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 19, 2026
திருச்சி கல்லூரியில் பரபரப்பு: குளிர்பானத்தில் கிடந்த பல்லி வால்

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதில் பல்லியின் வால் கிடந்துள்ளது. இதனைக் குடித்த 6 மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 19, 2026
திருச்சி: இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை தயார் படுத்தும் விதமாக, மத்திய அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமான இலவச பயிற்சி வகுப்புகள், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. இதில் போட்டித் தேர்வுகள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


