News May 10, 2024
எண்ணிக்கையை விட தரமே முக்கியம்: கோலி

நமக்கு நாமே நேர்மையாக இருப்பது தான் போட்டியில் முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி என RCB வீரர் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், “என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையை விட தரமே முக்கியம். இப்போதும் ஒரு பேட்ஸ்மேனாக முன்னேறுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் எங்களுக்கு தோல்விகள் இருந்தன. இந்த வெற்றிகளால் எங்களுடைய தன்னம்பிக்கை திரும்பியுள்ளது” எனக் கூறினார்.
Similar News
News September 23, 2025
உங்க கிச்சன் சிங்க்கை எப்படி வெச்சிருக்கீங்க?

காலையில் சமைத்த பாத்திரங்களை மாலை வரை கிச்சன் சிங்க்கில் போட்டு வைப்பது, ஆபத்தான பாக்டீரியாக்கள் உருவாக காரணமாகும் என ஆஸி., ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சிங்க்குகளில் அழுக்கு தேங்கி நிற்பதால், Biofilm என்ற படலம் உருவாகி, அதிலிருந்து பாக்டீரியாக்கள் வெளிவரும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கிச்சன் சிங்க்கை சுத்தமாக வெச்சிக்கோங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 23, 2025
Do or Die போட்டி: பாகிஸ்தான் பவுலிங்

ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவிடம் பாக். தோற்றதால் இன்றைய போட்டியில் வெல்வது அந்த அணிக்கு கட்டாயமாகும், தோற்றால் தொடரில் இருந்து வெளியேற நேரிடும். லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இலங்கையை பாக். வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. Head to Head = 23 போட்டிகள், வெற்றி = 13 பாகிஸ்தான், 10 இலங்கை.
News September 23, 2025
H1B விசா பிரச்னையால் விவாகரத்து கேட்கும் மனைவி?

எனது கணவர் H1B விசாவுடன் ஆண்டுக்கு ₹1.40 லட்சம் சம்பாதிக்கிறார், தற்போதைய சூழலில் இவரை விவாகரத்து செய்துவிட்டு, தன்னுடன் வேலை பார்க்கும் க்ரீன் கார்டு வைத்துள்ள நபரை திருமணம் செய்யலாமா? என்று இந்திய பெண் ஒருவர் X பதிவில் கேட்டிருந்தார். இந்த பதிவு உடனடியாக வைரலாகவே, இது டிரெண்டிங் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட பொய்யான பதிவு என சிலர் கூறுகின்றனர். இருந்தாலும் கொஞ்சம் திக்குனு தான் இருக்குது.