News February 9, 2026

குமரியில் ஒருவர் மர்ம உயிரிழப்பு; 4 பேர் கைது

image

குமரி மாவட்டம், மேலக்கலுங்கடியை சேர்ந்தவர் கார்த்திக் (36) இவர் கேமரா பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார். ஜூலை மாதம் 19ம் தேதி மர்மமான முறையில் அந்தப்பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்களும் இருந்தது. போலீசார் விசாரணையில் சிலர் அவரிடம் தகராறு செய்ததும் அப்போது அவர் கீழே விழுந்தது உயிரிழந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News February 14, 2026

குமரியில் இரவு காவல் ரோந்து அதிகாரிகள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, நேற்றைய (13.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News February 13, 2026

குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in 1<<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 13, 2026

குமரியில் நாளை அவசரகால மின்தடை

image

குமரி மாவட்டத்தில் நாளை (பிப்.14) சில அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக தெங்கம் புதூர், ராஜாக்கமங்கலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய உப மின் நிலையங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த மின்பாதையில் மின்னோட்டம் இருக்காது என கருதி பொதுமக்கள் மின்னூட்டிகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!