News February 9, 2026
கல்லூரி மாணவிகளின் ஆபாச படங்கள்.. சிக்கினார்!

AI பல நன்மைகளை தந்தாலும், சிலர் தீய செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். கோவையில் கல்லூரியில் படிக்கும் 24 மாணவிகளின் ஆபாச போட்டோக்கள் SM-ல் பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் களத்தில் குதித்த போலீசார், அதே கல்லூரியை சேர்ந்த 3-ம் ஆண்டு மாணவனை அதிரடியாக கைது செய்துள்ளனர். தனது காதலி மூலம் மாணவிகளின் போட்டோக்களை பெற்று இந்த கொடூரத்தை அந்த மாணவன் செய்துள்ளான். பெண்களே உஷார்.
Similar News
News February 19, 2026
ஏன் கம்ப்யூட்டர்களில் Disk A, Disk B ஸ்டோரேஜுகள் இல்லை?

ஏன் கணினிகளில் Local Disk A அல்லது B இல்லை என்பதற்கு ஒரு வரலாற்று பின்னணி உள்ளது. கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் Floppy Disk எனப்படும் குறுந்தகடுகள்தான் Storage-க்கு பயன்படுத்தப்பட்டது. அவற்றிற்கு A, B லெட்டர்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர் Hard Disk வந்த போது, Disk C & Disk D லெட்டர்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது Floppy disk இல்லாவிட்டாலும், இதுவொரு வழக்கமாகவே தொடர்ந்து வருகிறது. SHARE.
News February 19, 2026
தேமுதிக மூலம் காங்கிரஸுக்கு செக் வைக்க திமுக திட்டமா?

தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் விவகாரத்தில் 2016-ல் நழுவவிட்ட வாய்ப்பை 2026 தேர்தலில் திமுக செய்து முடித்துள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரேமலதாவை கூட்டணிக்கு இழுத்து கனிமொழி காரியம் சாதித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அத்துடன், ஆட்சியில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு தேமுதிகவை உள்ளே இழுத்து காங்.,-க்கு மறைமுகமான செக் சென்றும் சொல்லப்படுகிறது.
News February 19, 2026
ரஷ்மிகா கல்யாணம்.. Guest-க்கு இவ்ளோ கண்டிஷன் இருக்கா?

ரஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் பிப்.26-ல் உதய்பூரில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு குடும்பத்தினர், நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனராம். அத்துடன், போட்டோ, வீடியோ லீக் ஆவதை தவிர்க்க, கெஸ்டுகள் போன் கொண்டுவரக்கூடாது என கண்டிஷன் போடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், மார்ச் 4-ல் நடக்கும் ரிசப்ஷனில்தான் சினிமா பிரபலங்கள் பங்கேற்பார்கள் என பேசப்படுகிறது.


