News February 9, 2026

காலையில் இதை சாப்பிட்டால் முடி உதிராது

image

இளம் வயதிலேயே பலரும் முடி உதிர்வு பிரச்னையால் அவதியடைகின்றனர். இது அவர்களை மன ரீதியாகவும் பாதிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னைக்கு ஜீன் ஒரு காரணமாக இருந்தாலும், உணவு முறையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் காலை உணவாக சில சத்தான உணவை எடுப்பதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம். அது என்னென்ன உணவு என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

Similar News

News February 19, 2026

5 பெண்களை திருமணம் செய்த தமிழ் நடிகர்

image

ஆரம்பத்தில் நாடக கம்பெனியில் உடன் நடித்த பிரேமாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்த நடிகவேள் MR ராதாவுக்கு ஒரு மகன் பிறந்தார். பின்னர், மனைவி, மகன் இருவரும் அம்மை நோயால் இறந்தனர். இதையடுத்து, சரஸ்வதி, தனலட்சுமி என்ற சகோதரிகள் மற்றும் ஜெயம்மாள் ஆகியோரை வெவ்வேறு ஊர்களுக்கு சென்றபோது திருமணம் செய்துகொண்ட அவருக்கு மொத்தம் 12 குழந்தைகள். கடைசியாக திருமணம் செய்த கீதா ராதாவின் குழந்தைகளே ராதிகா, நிரோஷா.

News February 19, 2026

₹13,000 கோடியை முழுங்கிய பிரியாணி உணவகங்கள்

image

1.77 லட்சம் பிரியாணி உணவகங்கள் தங்களது ₹70,000 கோடி வருமானத்தில் ₹13,000 கோடி மதிப்புள்ள பில்லிங் பதிவுகள் நீக்கி வரி ஏய்ப்பு மோசடி செய்துள்ளன. இந்த ஸ்கேமை வருமான வரித்துறையினர் AI உதவியுடன் வெளிக்கொண்டு வந்துள்ளனர். இந்த மோசடி கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரியாணி உணவகங்களில் மட்டும் ₹1,200 கோடிக்கான பில்கள் நீக்கப்பட்டுள்ளது.

News February 19, 2026

காங்கிரஸுக்கு அழுத்தமா? செல்வப்பெருந்தகை பதில்

image

தேமுதிகவை கூட்டணியில் இணைத்ததன் மூலமாக காங்கிரஸுக்கு திமுக மறைமுக அழுத்தம் கொடுத்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், தேமுதிக வரவால் காங்கிரஸுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பே தேமுதிகவை இண்டியா கூட்டணியில் கொண்டு வருமாறு திமுகவுக்கு தான் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்ட அவர், கூட்டணியில் <<19185197>>தேமுதிக இணைந்ததை<<>> வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!