News May 10, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

* 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
* இன்று (மே 10) அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது.
* இன்று முதல் சட்டப்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்
* ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* குரூப் 2 தேர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.
Similar News
News September 24, 2025
புரட்டாசி 3-ம் நாள்: இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!

நவராத்திரியின் 3-ம் நாளில் இந்த வாராஹி மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா.
பொருள்:
செல்வ வளத்தையும், பாதுகாப்பையும், கவர்ச்சி & ஈர்ப்பு சக்தி தருபவளுமான வாராஹி தேவியை வணங்குகிறேன். அவர் எல்லா சித்திகளின் உருவமாக இருக்கிறார். என் தடைகள் அனைத்தும் நீங்கி, சுபீட்சம் பொங்கட்டும். SHARE.
News September 24, 2025
மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி கொடுத்த குட் நியூஸ்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களிடம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஓரிரு மாதங்களில் கூடுதல் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை உதயநிதி கூறியுள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தீபாவளி பரிசாக அக்டோபர் 15-ம் தேதி முதல்கட்ட பணம் அனுப்பப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.
News September 24, 2025
பாலிவுட்டில் களமிறங்கும் அர்ஜுன் தாஸ்

‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக கலக்கியவர் அர்ஜுன் தாஸ். தற்போது கதாநாயகனாக நடித்து வரும் அவர், தெலுங்கில் பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் அர்ஜுன் தாஸ் களமிறங்க உள்ளார். ‘டான் 3’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு வில்லனாக அவர் நடிக்க போகிறாராம். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.