News February 8, 2026

தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.

Similar News

News February 17, 2026

தவெக தேர்தல் அறிக்கை ரெடி.. 27-ம் தேதி வெளியிட திட்டம்

image

2026 தேர்தல் நெருங்குவதால் மக்களின் பார்வையை தவெக பக்கம் திரும்ப விஜய் தீவிரமாக திட்டம் வகுத்து வருகிறாராம். அதன்படி வரும் பிப். 27-ம் தேதி தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இலவசங்களை தவிர்த்து, மக்களை கவரும் அம்சங்களுடன் அறிக்கை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக, அதிமுகவின் இலவசங்கள் முன் TVK தேர்தல் அறிக்கை தாக்கு பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News February 17, 2026

நம்பிக்கை நாயகன் SK-வுக்கு பிறந்தநாள்

image

சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தொடங்கி தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நாயகன். கனவும் அதற்கான உழைப்பும் இருந்ததால் இங்கு எதுவும் சாத்தியம் என சாமனியனுக்கு உணர்த்திய நாயகன். கேலி கிண்டலுக்கு வெற்றி புன்னகையால் பதில் அளித்து வரும் நம்பிக்கை நட்சத்திரம். போஸ் பாண்டி, மேஜர் முகுந்த், செழியன் என பெயர் சொல்லும் கதாபாத்திரங்களால் மக்களின் மனங்களை வென்ற சிவகார்த்தியேகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

News February 17, 2026

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

image

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்ய உள்ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்ளதால், மக்​களைக் கவரும் பல முக்​கிய அறி​விப்புகள் இதில் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளது. பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்படும்.

error: Content is protected !!