News February 8, 2026

FLASH: திமுகவில் இணைந்தனர்.. இபிஎஸ் அதிர்ச்சி

image

தேர்தல் நெருங்குவதால், கட்சி மாறும் நிகழ்வுகள் வாடிக்கையாகிவிட்டன. சேலத்தில் அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுமாறு அவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். தனது சொந்த மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினரே, திமுகவில் இணைந்திருப்பது EPS தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News

News February 20, 2026

AI தாக்கத்தால் 1,000 பேர் பணிநீக்கம்

image

இன்டீரியர் டிசைனிங்கில் மிகவும் பிரபலமான Livspace நிறுவனம் 1,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. பணிகளுக்கு AI-ஐ பயன்படுத்தவும், செலவினங்களை குறைக்கவும் பணிநீக்க நடவடிக்கையை Livspace மேற்கொண்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 12% என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நிறுவனத்தின் இணை நிறுவனர் சவுரப் ஜெயின் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

News February 20, 2026

அதிமுகவுடன் கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

image

தேர்தலையொட்டி, பல சிறிய கட்சிகள், அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பின் நிறுவனத் தலைவர் பிரபாகரன், தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று EPS-ஐ சந்தித்தார். இதனையடுத்து, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு தங்களது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்வதாகவும் EPS-ஐ முதல்வராக்க பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

தங்கம், வெள்ளி.. விலை ₹60,000 குறைந்தது

image

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹640 குறைந்தாலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் 1 கிராம் ₹270-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், பிப்.11 – 20 வரையிலான 10 நாள்களில் 1 கிராம் ₹60-ம், 1 கிலோ ₹60,000-ம் குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மனமகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாள்களிலும் விலை குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

error: Content is protected !!