News February 8, 2026
நீலகிரி: இனி Whats app மூலம் வரி செலுத்தலாம்

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம். (SHARE)
Similar News
News February 12, 2026
நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நீலகிரியில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News February 12, 2026
நீலகிரி: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) இங்கு <
News February 12, 2026
நீலகிரி: 80 பேர் அதிரடி கைது

நீலகிரி மாவட்டத்தில், பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் சேரம்பாடி பஜாரில் கனரா வங்கிக்கு முன் CITU தொழிற்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜன் தலைமையில் சுமார் 80 பேர் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரும் 11.45 மணிக்கு கைது செய்யப்பட்டு, சேரம்பாடி சுங்கம் பகுதியில் உள்ள St. Sebastian Church Hall ல் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.


