News February 8, 2026
புத்தகத் திருவிழா: சிஇஓ முக்கிய அறிக்கை

நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: புத்தகத் திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6, 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை நாளை மாலை 3 மணிக்கு பள்ளிகளில் வகுப்பறை, கலையரங்கம் திறந்த வெளி போன்ற பகுதிகளில் அமர வைத்து நூல்களை குறைந்தது ஒரு மணி நேரமாவது வாசிக்க வைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.
Similar News
News February 10, 2026
நெல்லையில் அரசு வேலை வேண்டுமா? CLICK and APPLY!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்பை, சேரன்மகாதேவி, மானூர், பாளை, வள்ளியூர் உள்ளிட்ட 9 வட்டாரங்களில் காலியாக உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் கணினி ms- office 3 மாத சான்றிதழ் வகுப்பு பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <
News February 10, 2026
திருநெல்வேலி: போலீஸ் SSIக்கு அரிவாள் வெட்டு!

பணகுடி அருகே செம்பாடு கிராமத்தை சேர்ந்த நந்தகோபால்(52) போலீஸ் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிகிறார். இவரது மகளுக்கு திருமணமான நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்னை உள்ளது. நேற்று மாலை மருமகன் குடும்பத்தினர் நந்தகோபால் வீட்டிற்கு சமாதானம் பேச வந்த போது தகராறு ஏற்பட்டது. மருமகன் சந்தனசெல்வன் நந்தகோபாலை அரிவாளால் தாக்கியுள்ளார். நந்தகோபால அளித்த புகாரில் பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 10, 2026
திருநெல்வேலி: தொழிலாளி வெட்டிக் கொலை!

மூன்றடைப்பு, பாணாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி(50), இவரது மனைவி, மகன் கேரளாவில் தங்கி வடை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் 6 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த இசக்கிபாண்டி தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இசக்கிபாண்டி சடலமாக கிடந்தார். மூன்றடைப்பு போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


